திடீரென பூனம் பாண்டே செய்த வேலை.. ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்.. டிரெண்டான #AskPoonamPandey

By Mari S

|

மும்பை: அரசு இடத்தில் முழு நிர்வாணமாக வீடியோ எடுத்த சர்ச்சையில் சிக்கி இருந்த நடிகை பூனம் பாண்டே, திடீரென ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டரில் பதில் அளித்து டிரெண்டானார்.

சமீபத்தில் தனது காதலரான சாம் பாம்பாவே திருமணம் செய்து கொண்டார் நடிகை பூனம் பாண்டே.

அந்த செய்தி வைரலாவதற்குள், இருவருக்கும் நடந்த பயங்கரமான ஹனிமூன் சண்டை தீயாய் பரவி நாடு முழுவதும் பரபரப்பானது.

சுற்றும் சர்ச்சை

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, யுடர்ன் அடித்து ஆபாச பட நடிகையாக முழுவதுமாக மாறிவிட்டார். மேலும், அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் புதிய புதிய சர்ச்சைகளை கிளப்பி, சமூக வலைதளத்தை பரபரப்பாக்குவது வாடிக்கையாகி வருகிறது. சர்ச்சை நாயகி என்றே ரசிகர்கள் அவரை அழைத்து வருகின்றனர்.

மிருகத்தை அடிப்பது போல

மிருகத்தை அடிப்பது போல

சமீபத்தில், தனது நீண்ட நாள் காதலனான சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்ட பூனம் பாண்டே. கோவாவுக்கு ஹனிமூன் சென்றார். 7 ஜென்மம் சேர்ந்து வாழ்வோம் என வசனம் எல்லாம் பேசிய பூனம் பாண்டே, திடீரென மிருகம் மாதிரி அடிக்கிறார், அவரை கைது செய்யுங்க, என போலீசில் பரபரப்பாக புகார் கொடுத்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விவாகரத்து செய்யவில்லை

விவாகரத்து செய்யவில்லை

திருமணமான 13 நாட்களில் கணவன் மீது அதிரடியாக வன்கொடுமை வழக்கு கொடுத்த பூனம் பாண்டேவை பார்த்த ரசிகர்கள், சீக்கிரமே சாம் பாம்பேவை விவாகரத்து செய்வாரா? என எதிர்பார்த்த நிலையில், காதல் கண்ணை மறைத்த காரணத்தால், மீண்டும் அவருடன் இணைந்து கொண்டார்.

நிர்வாண வீடியோ

நிர்வாண வீடியோ

அதன் பின்னர், ஹாலோவின் சர்ப்ரைஸ் எனக் கூறிவிட்டு, கோவாவின் பிரபல நீர்த்தேக்கம் அருகே ஆடைகளை அகற்றி நிர்வாணமாக எடுத்த வீடியோவால் ஏற்பட்ட புதிய சர்ச்சைக் காரணமாக பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் சாம் பாம்பாவை போலீசார் ரிமாண்ட் செய்து விசாரித்தனர். இந்நிலையில், அந்த பிரச்சனையில் இருந்து பூனம் தப்பித்து விட்டார் என்றே தெரிகிறது.

ரசிகர்கள் கேள்விக்கு பதில்

இன்று திடீரென ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் போகிறேன் என ஒரு பக்க மார்பை காட்டியபடி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ஒட்டுமொத்த ரசிகர்களையும் வரிசையில் நிற்க வைத்தார். #AskPoonamPandey என்கிற ஹாஷ்டேக்கில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து வந்த பூனம் பாண்டே, இந்தியளவில் அந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தார்.

கல்யாண வாழ்க்கை எப்படி போகுது

பிடித்த வெப்சீரிஸ் என்ன என்கிற கேள்விக்கு மிர்சாபூர் என பதில் அளித்தார். பிடித்த இடம் என்கிற கேள்விக்கு மாலி தீவு என்றார். மேலும், ஏகப்பட்ட ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த பூனம் பாண்டேவிடம், கோவா பிரச்சனைக்கு அப்புறம் கல்யாண வாழ்க்கை எப்படி போகுதுன்னு ஒரு ரசிகர் கேட்டதும், கேட்டதற்கு நன்றி, இப்போ நல்லாவே போகுதுன்னு பதில் சொன்னார்.

சீக்கிரமே அப்படி பண்றேன்

மேலும், இன்னொரு ரசிகர், கேட் உமனாக ஒரு வீடியோவை வெளியிடுங்க, உங்க உடல் தோற்றத்திற்கு, கேட் உமன் லுக் சூப்பரா செட்டாகும் என சொல்ல, நல்ல ஐடியாவா இருக்கே, கண்டிப்பா சீக்கிரம் அதையும் பண்றேன் என ரசிகர்களை மகிழ்வித்தார். இப்படி திடீரென பூனம் பாண்டே ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்ததற்கு பின்னணியில் ஏதோ விஷயம் இருக்கு என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

வெப்சீரிஸில்

வெப்சீரிஸில்

2018ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல், அரை நிர்வாண வீடியோக்கள் மற்றும் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு வந்த பூனம் பாண்டே, வெகு சீக்கிரமாகவே வெப்சீரிஸ் ஒன்றில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கப் போகிறார் என்றும், அதன் அறிவிப்புகள் வருவதற்கு முன்பாக, ரசிகர்களை ஒன்று திரட்டவே இந்த கேள்வி பதில் செக்‌ஷன் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.