தென்காசி அரசு விழாவை புறக்கணித்த பத்திரிகையாளர்கள்

தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை பகல் 2:00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் அரசுப் பள்ளியில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாலு முப்பது மணி வரை நிகழ்ச்சி துவங்கவில்லை.4.50 மணிக்கு அமைச்சர் ராஜலட்சுமி வந்த பின்னரே 5 மணிக்கு மேல் நிகழ்ச்சி துவங்கியது.

இந்த நிகழ்ச்சிக்காக காலை பதினொரு மணி முதலே பயனாளிகளும் அவர்கள் பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இரண்டு மணி நேரமாக பத்திரிகையாளர்களும் காத்திருந்தனர். அவர்களுக்கு நிகழ்ச்சி அரங்கில் இடம் மற்றும் இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை மேலும் எத்தனை மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என்பது குறித்து உறுதியான தகவலும் அளிக்கப்படவில்லை இதன் காரணமாக அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து ஒட்டுமொத்தமாக பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். தென்காசியில் அரசு நிகழ்ச்சியை பத்திரிகையாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது இதுவே முதல்முறை.

https://tamil.thesubeditor.com/news/tamilnadu/25627-journalists-boycott-the-tenkasi-govt-function.html

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.