நாளை முதல் ரயில்சேவை; ஆனால் இந்த இடங்களில் நிற்காது

நாளை தொடக்கம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி விசேட அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த ரயில்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் நிறுத்தாமல் பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு கோட்டை, பொல்காவல,ரம்புக்கன, கண்டி, கனேவத்த. மஹவ ஆகிய பிரதான ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் ரயில்கள், மருதானை, தெமட்டகொட, களணி, வனவாசல, ஹொரபெ, ராகம, வல்பொல,பட்டுவத்த ஆகிய ரயில் நிலையங்களில் இந்த விசேட அலுவலக ரயில் நிறுத்தப்படாதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேப்போல் சிலாபம் ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் கொழும்பு கோட்டை, சிலாபம்,புத்தளம் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் அதேவேளை, மருதானை, தெமட்டகொட,களணி, வனவாசல, ஹொரபெ,ராகம, பேரலந்த,குரண,நீர்கொழும்பு, கட்டுவ ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,களனிவெளி ரயில் சேவைகள் கொழும்பு கோட்டை, கொஸ்கம, அவிசாவளை ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதுடன்,மருதானை, பேஸ்லைன் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது.

மேலும் கடல்மார்க்க ரயில்கள் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை, களுத்துறை, அளுத்கம, ஹிக்கடுவ, காலி, மாத்தறை, பெலியத்த வரை பயணிக்கும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.