பாவம்டா சுச்சி.. போகும் போதுக்கூட மனச நோகடிச்சுதான் அனுப்பி இருக்கீங்க.. கவலையில் ரசிகர்கள்!

|

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே கவலை அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் சுச்சி மிஸ் ஆகியுள்ளார். ஏற்கனவே சுச்சிதான் வெளியேறிவிட்டார் என்ற தகவல் நேற்று முதலே பரவி வருகிறது.

இதனைக் கேட்ட ரசிகர்கள், அன்புக்காக ஏங்கிய ஒரு போட்டியாளர் சுச்சி என்று அவருக்காக பரிதாபப்பட்டு வந்தனர்.

நெட்டிசன்ஸ் கமெண்ட்

இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் சுச்சியை ஹவுஸ்மேட்ஸ் வழியனுப்பி வைத்துவிட்டு வரும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் சுச்சியை தவிர மற்ற அனைத்து ஹவுஸ்மேட்டும் உள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பச்சை புள்ளைக்கும் தெரியும்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வெளியே போனது சுச்சிதான்னு பச்சை புள்ளைக்கும் தெரியும் ஆண்டவரே.. என பதிவிட்டுள்ளார்.

அர்ச்சனா பிளான்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாவோட பார்வை இப்போ சம்யுக்தா மற்றும் பாலாஜி முருகதாஸ் மேல தான். ரெண்டு பேரையும் அவளோட டீம்க்கு கொண்டு வந்துட்டா நாமினேஷன்ல வராம பைனல் வரையும் போயிடலாம்னு பிளான் பண்ணிட்டா போல.. அதே சமயம் அர்ச்சனாவோட ஈசி டார்கெட் அனிதா சம்பத்.

மனசு நோகடிச்சு..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவம் டா சுசித்ரா போகும் போது கூட மனசு நோகடிச்சு தான் அனுப்பி இருக்குறீங்க. சம்யுக்தா நீ அடிச்ச செம்பு உன்னக்கு நல்லா உதவி பண்ணுது என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இதுல என்ன டிவிஸ்ட்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சோமு மாதிரி நல்லவங்க உள்ள இருக்கிறதே ஆச்சரியம் தான்..! இதுல என்ன டிவிஸ்ட் வச்சிருக்கோ விஜய் டிவி என கேட்டுள்ளார்.

பச்ச முட்டாளுங்களா

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஜயோ தாங்கலடா சாமி. இந்த பொய்யன் பயில்வான் மாறியேதான் இவனோட செம்புகளும் விளக்கம் இல்லாத பச்ச முட்டாளுங்களா இருக்குறாய்ங்க. ஸ்சப்பா முடியலடா நிஐமா.. என அலுத்துள்ளார்.

மற்ற ஹவுஸ்மேட்ஸ்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆக சுச்சி வெளியேற்றப்பட்டு விட்டார் என்பது இந்த வீடியோவின் மூலம் தெரிய வந்துள்ளது. அவரை தவிர மற்ற அனைத்து ஹவுஸ்மெட்ஸும் உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

பாதாளத்தில் விழுந்த சுச்சி

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வைல்டு கார்டு என்ட்ரியா உள்ளே வந்த உடனே பயில்வானுக்கு சப்போர்ட் பண்ணியதால் பாதாளத்தில் விழுந்த சுச்சி!.. பின்பு சுதாரித்து எழுந்தாலும் பயனில்லை!.. வெளியே போறதை தவிற வேறு வழியில்லை.. என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.