பெங்களூருவில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

பெங்களூருவில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கே.ஆர். சந்தை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது, 6 கிலோ எடையிலான நெக்லஸ்கள், கம்மல் மற்றும் வளையல்கள் போன்ற நகைகள் பையில் இருந்துள்ளது.

நகைக்கடைகளுக்கு சப்ளை செய்ய நகைகளை கொண்டு செல்வதாக இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், நகைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.