பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டொனால்டு டிரம்ப் தாக்கல் செய்த மனுவை அம்மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிபர் தேர்தலில், பென்சில்வேனியா மாகாணத்தில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி டிரம்ப் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரங்களை டிரம்ப் தரப்பு சமர்ப்பிக்க தவறியதால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

இதனால், தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரம்ப் தரப்பினருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.