மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றிய சென்னை போலீசார் ! குவியும் பாராட்டுகள் !!

சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் சுற்றித்திரிந்த பெண்ணுக்கு, சென்னை பெருநகர போலீசாரின் உதவியால், மறுவாழ்வு முகாமில் அடைக்கலம் வழங்கப்பட்டது.

சென்னை பெருநகரில் ஆதரவற்றோர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை உடனே தடுக்க வேண்டும் என காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில், அம்மா ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் அஞ்சலி மற்றும் பெண் தலைமைக் காவலர்கள் சசிகலா  மற்றும் சசிகலா ஆகியோர் தி.நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்தனர்.

அப்போது, மனநலம் பாதிக்கப்பட்டு அங்குமிங்கும் ஒரு பெண் சுற்றித்திரிந்துள்ளார்.  உடனே அந்த பெண்ணை மீட்டு விசாரணை செய்தனர். அதில், அவரது பெயர் சங்கீதா என்றும், அவருக்கு வயது 35 என்றும், தெரிய வந்தது. 

இதனையடுத்து, காவல் குழுவினர் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு, அந்த பெண்ணை மனநலம் பாதித்தோர் மறுவாழ்வு முகாமில் சேர்த்தனர். காவல்துறையின் இந்த மனித நேயமிக்க செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.