மாலத்தீவிற்கு கணவருடன் சென்ற சமந்தா – Samantha fly to maladives

மாலத்தீவிற்கு கணவருடன் சென்ற சமந்தா

22 நவ, 2020 – 15:43 IST

மாலத் தீவுகள் மீது நமது நடிகைகளுக்கு அவ்வளவு காதல் போலிருக்கிறது. கடந்த மாதம் திருமணம் முடிந்த காஜல் அகர்வால் கணவருடன் தேனிலவிற்காக மாலத் தீவு சென்றார்.
அடுத்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க அங்கு சென்றுள்ளார். நடிகை வேதிகாவும் கடந்த சில நாட்களாக மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவர்கள் வரிசையில் அடுத்து நடிகை சமந்தா, கணவர் நாகசைதன்யாவுடன் மாலத்தீவிற்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.
கொரோனா தொற்று ஆரம்பமானதுமே விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக சினிமா பிரபலங்கள் எங்கும் வெளியில் செல்லாமல் இருக்கின்றனர்.
மாலத்தீவில் மக்கள் நெருக்கம் குறைவு என்பதாலும், அங்குள்ள நட்சத்திர ரிசார்ட்டுகளும் பரந்த அளவில் இருப்பதாலும், நமது நாட்டிற்கு மிக அருகில் இருப்பதாலும் நடிகைகள் மாலத்தீவை தற்போது அவர்களுடைய சுற்றுலாத்தளமாக மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.