வேல் அரசியல்: மருதமலையில் பூசை அதன்பின் போலீசோடு சண்டை!

கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தி சமூக ஊடகத்தில் வெளியிட்டவர்களைக் கண்டித்து தமிழ்நாட்டில்
பாஜக
வேல் பூசை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் எல்.
முருகன்
தெரிவித்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி கடந்த 6ஆம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை முருகன் தொடக்கினார். தடையை மீறியதால் அவர் கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களில் வேல் யாத்திரை தொடங்குவதும், கைது செய்வதும் தொடர் கதையாகிப் போனது. இந்நிலையில்
கோவை
மருதமலை முருகன் கோயிலில் கர்நாடக துணை முதலமைச்சர்
அஸ்வந்த் நாராயண்
, பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வேல் பூசை நடத்தினர்.

அப்போது தமிழ்நாடு பாஜகவினர் ஏற்பாட்டில் பூர்ண கும்ப மரியாதையைத் துணை முதலமைச்சர் அஸ்வந்தும், முருகனும் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சிவானந்த காலனி பகுதியில் நடைபெறும் கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

ஸ்டாலினுக்காக திமுக பெண் தொண்டர் தீக்குளித்து தற்கொலை முயற்சி!

பாஜக தலைவர் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களின் காரை தொடர்ந்து வந்த காரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து காவல் துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வடவள்ளி பகுதி துணைத் தலைவர் சி ஆர் வேணுகோபால் ,கவுண்டம்பாளையம் மருத்துவ அணித் தலைவர் பாலச்சந்திரன் வர்மா, செயலாளர் பூபால், பொருளாளர், பிரதீப், ஜெயபிரகாஷ், வேல்முறுகன் உள்ளிட்ட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.