அங்காடி தெரு, வெயில், அரவான் என மிகவும் எதார்த்தமான கதைகளை படமாக எடுத்து பிரபலமான, இயக்குனர் வசந்த பாலனின் துணை இயக்குனர் ஒருவர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

விண்டோ பாய்ஸ் எனும் நிறுவனம் சார்பாக R.சோமசுந்தரம் எனும் அறிமுக தயாரிப்பாளர் முதன்முறையாக ஒரு வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகிக் கொண்டிருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கலந்த ஹாரர் படமொன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் போன்ற சிறந்த படங்களிலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா போன்ற படங்களிலும் உதவி மற்றும் துணை இயக்குநராக பணியாற்றிய ரமேஷ் பழனிவேல் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

பிரபுதேவா நடித்த குலேபகாவலி மற்றும் ஜோதிகா நடித்த ஜாக்பாட் படங்களின் ஒளிப்பதிவாளரான R.S.ஆனந்தகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணீயாற்றிக் கொண்டிருக்கிறார்  விஜய் ராஜன் கலை இயக்குநராகவும் M.ரவிக்குமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்ணனி கோர்ப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.எல்லா காலகட்டங்களிலும் ஹாரர்,சஸ்பென்ஸ்,திரில்லர் வகை திரைப்படங்கள் சரியாக சொல்கிறபட்சத்தில் பெரிதும் வெற்றியடந்துள்ளன. பீட்ஸா,ராட்சஸன் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.அப்படியான ஒரு புதிய முயற்சியாக சஸ்பென்ஸ் திரில்லர் திகில் என எல்லாம் கலந்து சற்றும் சுவாரஸ்யம் குறையாத வகையில் உணர்வுப்பூர்வமான படமாக இப்படம் உருவாகியுள்ளது.


 
ராதிகா அவர்களின் ராடன் நிறுவனம் தயாரித்து சரத்குமார் பிரகாஷ்ராஜ் சேரன் நடிப்பில் வெளிவந்த சென்னையில் ஒருநாள் படத்தில் பார்வதி மேனனுக்கு ஜோடியாக நடித்த சச்சின் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். G.V.பிரகாஷ்குமார் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் ஜெயில் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள அபர்நதி கதைநாயகியாக நடித்துள்ளார் மேலும் கும்கி அஸ்வின் மற்றும் சுருதி பெரியசாமி எனும் அறிமுக நடிகையும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.