21% வளர்ச்சியில் Gland பார்மா.. முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம்..!

சீன நிறுவனத்தின் அதீத முதலீட்டில் இயங்கி வரும் Gland பார்மா மும்பை பங்குச்சந்தையில் பல குழப்பமான சூழ்நிலையில் முதலீடு செய்யப்பட்ட போதும், இந்நிறுவன முதலீட்டாளர்களுக்குச் சிறப்பான லாபத்தைக் கொடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் Gland பார்மா பங்குகள் சுமார் 21 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

Gland பார்மா நிறுவனத்தின் பங்குகள் 1,500 ரூபாய் விலைக்கு ஐபிஓ-வில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 13 சதவீத ப்ரீமியம் விலைக்குப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் வர்த்தக முடிவில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து 21 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 1,701 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்ட Gland பார்மா பங்குகள் வர்த்தக முடிவில் 1820.45 ரூபாயாக முடிவடைந்தது. இதேபோல் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் Gland பார்மா பங்குகள் அதிகப்படியாக 1,850 ரூபாய் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை

இதே போல் தேசிய பங்குச்சந்தையில் 1,710 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டு அதிகப்படியாக 1850 ரூபாய் என்ற உச்ச விலையைத் தொட்டுள்ளது Gland பார்மா. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் Gland பார்மா பங்குகள் விலை 1,828 ரூபாய்

விலைக்கு முடிவடைந்தது.

21 சதவீத பங்கு வளர்ச்சி

21 சதவீத பங்கு வளர்ச்சி

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் Gland பார்மா மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் 21 சதவீத பங்கு வளர்ச்சியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்தின் மீது முதலீட்டாளர்களின்

எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது.

சீன முதலீடுகள்

சீன முதலீடுகள்

Gland பார்மா இந்தியாவில் பல மருத்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு முக்கியக் காரணம் இந்நிறுவனத்தில் குவிந்த சீன முதலீடுகள் தான்.

ரீடைல் சந்தை
 

ரீடைல் சந்தை

இந்நிறுவனத்தின் பெருமளவிலான பங்குகளை Fosun சீங்கப்பூர் மற்றும் ஷாங்காய் Fosun பார்மா ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது. இந்த Gland பார்மா தற்போது ஐபிஓ சந்தையில் ரீடைல விற்பனை சந்தையில் சுமார் 3,48,63,635 பங்குகளை விற்பனை செய்து 1,250 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்டியுள்ளது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இதோடு Gland பார்மா நிறுவனம் சிங்கப்பூர் அரசு, நோமூரா, கோல்மேன் சாச்சீஸ், மோர்கன் ஸ்டான்லி, எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட்ஸ், ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட், எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், பிடிலிட்டி ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பங்குகளைச் சேர்ந்து மொத்தம் 1,944 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்டியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.