அரியலூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் கொலை !

அரியலூர் அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்கு ஆயுதகளம் நடு தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (23). இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று இரவு பிரவீன் குமார் வீட்டிற்கு வரவில்லை. இதனிடையே, ஆயுதகளத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில் ஊரின் ஒதுக்குப்புறமாக பயனற்ற கூரை கொட்டகையின் அருகே அவரது உடல் ரத்தங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி பொது மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, ஜெயங்கொண்டம் காவல்துறையினர் டிஎஸ்பி துரைராஜ் உள்ளிட்டோர் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது,  கழிப்பறை செப்டிக் டேங்கில் பிரவீன் குமார் பலத்த வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

அவரது உடலை தோண்டி எடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன்  கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.