விவசாயி செய்யுற வேலையா இது? எடப்பாடியை புரட்டி எடுத்த மு.க. ஸ்டாலின்!

நானும் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமி,  சேலத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை போலீஸ் மூலமாக அடித்து நொறுக்கி கைது செய்தது ஏன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் பேசினார். 

தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, மக்களின் நன்மையைப் பார்க்காமல் முடக்கி வைத்துள்ளது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தகவல் தொழில் நுட்பப் பூங்கா பணிகள் இதுவரை முடக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளார்கள். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காகப் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை.

ஏற்காடு மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தாவரவியல் பூங்கா துவக்கப்பட்டது. ஆனால் அதனை முறையாக அ.தி.மு.க. அரசு செயல்படவில்லை. 

மேட்டூர் – ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம் என்பது தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளுக்கு இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை.

null

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைச் சரியாகக் கவனிக்காமல் சாதாரண மருத்துவமனை போல ஆக்கிவிட்டார்கள். எலி ஓடுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதான் மருத்துவமனைகளை காப்பாற்றும் லட்சணமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களைத்தான் செயல்படுத்தவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையாவது செயல்படுத்தினார்களா என்றால், அதுவும் இல்லை!  சேலம் எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த நினைக்கிறது. இதனை விவசாயிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள். ஒரு முதலமைச்சர் என்ன செய்திருக்க வேண்டும்? போராடும் மக்களை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். 

தங்களது நிலங்கள் பறி போகும் என்று போராடும் மக்களை அவர் அழைத்துப் பேசினாரா? இல்லை. போலீசை அனுப்பி கைது செய்கிறார், அடிக்கிறார், விரட்டுகிறார். 

நானும் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் இவர், எட்டுவழிச்சாலைக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை போலீஸ் மூலமாக அடித்து நொறுக்கவில்லையா? இதுதான் விவசாயிக்கு அழகா? என வெளுத்து வாங்கியுள்ளார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார் என தெரியவில்லை.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.