அமீரகத்தில் புதிதாக 2,950 பேருக்கு கொரோனா தொற்று

அபுதாபி:

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 435 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்து 704 ஆக அதிகரித்தது.

இதில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 218 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 1,396 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 3 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 697 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 22 ஆயிரத்து 611 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் 8 லட்சத்து 87 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.