தானே: சோசியல் மீடியா நட்பு; கூட்டு பாலியல் வன்கொடுமை! – குஜராத் ஆண் மாடலுக்கு நேர்ந்த கொடுமை

குஜராத்தைச் சேர்ந்த ஆண் மாடல் ஒருவர், மகாராஷ்டிராவின் தானே நகரின் பயன்பாடற்ற கட்டடத்தின் மொட்டை மாடியில் வைத்து, துன்புறுத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஆண் ஒருவரை 4 பேர் கூட்டாக வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த 19 வயதான ஆண் நடிகர் (மாடல்) ஒருவர், திரைத்துறையில் வாய்ப்புத் தேடி மும்பை வந்துள்ளார். அவர் மகாராஷ்டிராவின் தானேவில், தனது உறவினர்களுடன் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு சமூக வலைதளம் மூலமாக அப்பகுதியைச் சேர்ந்த புனித் சுக்லா (Puneet Shukla) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சமூக வலைதளங்களில் பேசி வந்த நிலையில் புனித் சுக்லா, ஆண் மாடலை நேரில் சந்திக்க வலியுறுத்தியுள்ளார். பின்னர், மேலும் சில நண்பர்களை சந்திக்கவும் குஜராத் ஆண் மாடலை அழைத்துச் சென்றுள்ளார் சுக்லா.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

அப்போது, சுக்லாவும் அவரது நண்பரும் ஆண் மாடலை தானே நகரில் பயன்பாடற்ற கட்டடம் ஒன்றின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர், அங்கு அவர்களோடு மேலும் இரண்டு ஆண்கள் சேர்ந்து, நான்கு நபர்களும் ஆண் மாடலை கீழே தள்ளி தாக்கியுள்ளனர். அவரிடமிருந்த பணம் உள்ளிட்டவற்றை மிரட்டி அவர்கள் பறித்திருக்கிறார்கள். பின்னர், ஆண் மாடலை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அங்கிருந்து தப்ப முயன்றபோது, அவர்கள் அந்த ஆண் மாடலைக் கடுமைதாகத் தாக்கியுள்ளனர்.

Also Read: நாகை: வாயை மூடி கோயிலுக்குள்வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை! – விதவைக்கு நேர்ந்த கொடூரம்

அதே நேரத்தில், சுக்லா மொட்டை மாடியில் நடந்த முழு சம்பவத்தையும் கேமராவில் படமாக்கியுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகாரளித்தால், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவேன் என்றும் ஆண் மாடலை மிரட்டியுள்ளார் சுக்லா.

பாலியல் வன்கொடுமை

அதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர், தான் தங்கியிருந்த உறவினரின் வீட்டுக்கு வந்துள்ளார். குடும்பத்தினரிடம் அவர் முழு சம்பவத்தையும் விவரிக்கவே, அவர்கள் உதவியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் குஜராத் ஆண் மாடல்.

குற்றம் சாட்டப்பட்ட சுக்லா மற்றும் அவரது நண்பர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு., புனித் சுக்லா, 34 வயதான ரவி ஜெய்ஸ்வால், 23 வயதான அரவிந்த் பிரஜாபதி உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆண் ஒருவரை 4 ஆண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.