பாமக கொடுக்கும் நெருக்கடி: என்ன செய்யப் போகிறது அதிமுக?

தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்று வரும் நிலையில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோரிக்கைகளும் அடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு விவகாரத்தை
பாமக
கையில் எடுத்துள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது பாமக நடத்திய பல்வேறு போராட்டங்களின் அடிப்படையில் கிடைத்தது என அக்கட்சியினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள 115 சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதை அனுபவித்து வருவதாகவும்
வன்னியர்
சமூகத்தினர் இந்த சலுகையை அதிகம் பெற முடியாமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமகவினர் தொடர்சியாக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால் தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என பாமக
அதிமுக
அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. இந்நிலையில் பாமக இதற்கு முன் வலியுறுத்திய சாதிவாரி கணக்கெடுப்புக்கு க்ரீன் சிக்னல் காட்டியது அதிமுக. இது கோரிக்கையை தள்ளிப்போடும் நடவடிக்கை என பாமகவுக்குள் இருந்து அதிருப்தி குரல்கள் ஒலித்தன. இந்நிலையில் நேற்று பாமகவின் நிர்வாகக் குழு கூட்டம் ஆன்லைனில் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சசிகலா விடுதலையில் பெரிய சிக்கல்: டெல்லி பறந்த தினகரன்?

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு என கேட்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில்
உள் ஒதுக்கீடு
அளிக்குமாறு
ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார். ராமதாஸ் வைத்துள்ள இந்த கோரிக்கையை ஏற்று பொங்கலுக்கு பிறகு கூடவுள்ள சட்டப் பேரவை கூட்டத்தொடரில் இதை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 சதவீதத்தில் பெரும்பான்மை இடங்கள் வன்னியர் சமூகத்துக்கும் மீதமுள்ளவை பிற 114 சாதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என பாமக தரப்பிலிருந்து அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுக அரசு சம்மதித்து நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே கூட்டணியில் தொடர்வோம் அல்லது வேறு முடிவு எடுக்க வேண்டியது வரும் என அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜிபி டேட்டா: முதல்வர் உத்தரவு!

பாமகவின் முடிவுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கூட்டணி போய்விடும். அதனால் தேர்தலில் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும். அதே சமயம் பாமகவுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினால் மீதமுள்ள 114 சமூக மக்களின் எதிர்ப்பை பெற வேண்டிவரும். அது அதிமுகவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இதனால் அதிமுக என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.