உலக தமிழர்கள் பொங்கல் விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இன்று தை பொங்கல், நாளை மாட்டுப்பொங்கல், நாளை மறுநாள் காணும் பொங்கல் என தமிழர்களின் இல்லம் மூன்று நாள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஆவடி சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசுகையில், ” கோலம்பெடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழாவிற்கு வந்துள்ளேன். நாளை திருவெரும்பூதூர் தோட்டத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடவுள்ளேன். அவரவர்களின் இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.
உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின் இல்லங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி, மதங்களை கடந்து பொங்கல் விழா கொண்டாட வேண்டும் என்று முன்னாள் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் ஆசைப்பட்டார். அவரின் ஆசையை நிறைவேற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன் ” என்று பேசினார்.