காங்கிரஸ் கூட்டணியில் திடீர் விரிசல்? டெல்லி வரை சென்ற பஞ்சாயத்து !!

திமுக – காங்கிரஸ் கட்சி இடையே தொகுதிகளை முடிவு செய்வதில் மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டு, கூட்டணியில் விரிசல் விழும் அளவுக்கு சென்றுவிட்டதாம்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக – பாஜக இரண்டு கட்சியுமே தயாராகி விட்டது.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை டெல்லிதான் முடிவு செய்யும் என தமிழக தலைவர் முருகன் அறிவித்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்தது. இதனையடுத்து, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என தமிழக பாஜக பொறுப்பளர் சிடி ரவி அறிவித்தார். இதனையடுத்து, அதிமுக – பாஜக பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில், உறுதியுடன் இருந்த திமுக – காங்கிரஸ் கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டு பஞ்சாயத்து டெல்லி வரை சென்றுள்ளது. திமுக கூட்டணியில் கடந்த 2011 -ம் ஆண்டு அல்லது 2016 -ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த அதே இடங்களை கொடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.

ஆனால், தற்போது அந்த அளவு சீட் கொடுக்க முடியாது என திமுக கைவிரித்துவிட்டதாம். அதிபட்சம் 15 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம். இதைக்கேட்ட டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாம். அந்த தகவல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு தெரிய வந்தபோது அவர்கள் கொதித்தேபோய் விட்டார்களாம். இதனையடுத்து, கொஞ்சம் இறங்கிவந்து 20 சீட் கொடுக்க திமுக முன்வந்துள்ளது. 

இதனால், வெறுத்துப்போன அகில இந்திய காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியே வேண்டாம் 3-வது அணிக்கு முயற்சி செய்யுங்க என டெல்லியில் இருந்து சிக்னல் வந்துள்ளதாம். இதனால், திமுக தரப்பு மிகவும் ஷாக்கி விட்டதாம்

இதனிடையே, பொங்கல் விழாவுக்காக இன்று அகில இந்திய முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, மதுரையில் ஜல்லிகட்டை பார்வையிட வந்துள்ளார். அவருடன் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். 

ஆனால், ராகுல் காந்தி தமிழகம் வருவது திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யத்தானாம். திரைமறைவில் நடைபெறும் இந்த அரசியல் விசயங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலை உருவாக்கியுள்ளது.

மேலும், திமுக – காங்கிரஸ் கூட்டணியை முறியடிக்க தமிழக உளவுத்துறையும், மத்திய உளவுத்துறையும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாம். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.