பதவியை இழக்கும் பேராபத்தில் டிரம்ப்! வெளியான அதிரடி அறிக்கை

டிரம்பை பதவி நீக்குவதற்கான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நேற்று நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் 222 ஜனநாயக கட்சி உறுப்பினர்களும், 10 குடியரசு கட்சி உறுப்பினர்களும் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இதன் மூலம் இரண்டாவது முறையாக பதவிநீக்க நடைமுறைகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்கொள்கிறார்.

தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் டிரம்ப் மீது விசாரணை நடக்கும்.

செனட்டில் அவர் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டும்.

குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.