புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்திய பத்திரிகைகள் சங்க தலைவரும் கோவை தினமலர் வெளியீட்டாளருமான எல். ஆதிமூலம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் தெரிவித்து இருப்பதாவது: நாட்டில் கொரோனாவால் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் அச்சு ஊடகத்துறையும் ஒன்று. அந்த பாதிப்பில் இருந்து அச்சு ஊடகத்துறையை காப்பாற்ற வேண்டும். பத்திரிகைகளின் மீதான சுங்க வரியை குறைக்க வேண்டும். பத்திரிகைகளுக்கு அரசு தரும் விளம்பரங்கள் கட்டணம் குறைவாக உள்ளது அதனை உயர்த்தி தர வேண்டும்.
![]() |
ஏற்கனவே நிலுவையில் உள்ள பத்திரிகைகளுக்கு வரவேண்டிய விளம்பர கட்டண தொகைகளை உடனடியாக தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நிறைவேற்ற வேண்டும் என மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement