பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸி. தொடக்க வீரர் புகோவ்ஸ்கி விலகல்!

 

பிரிஸ்பேனில் நாளை தொடங்கவுள்ள 4-வது டெஸ்டில் இருந்து ஆஸி. தொடக்க வீரர் புகோவ்ஸ்கி காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அபாரமாக ஆடி டிரா செய்தது. 4-வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நாளை தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு சிட்னி டெஸ்டில் ஃபீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் 4-வது டெஸ்டில் இருந்து அவர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என ஆஸி. கேப்டன் டிம் பெயின் அறிவித்துள்ளார். 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.