ரஜினி ஆதரவாளர் பாஜகவில் இணைய வாய்ப்பு ?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில், உடல்நலக் கோளாறு காரணமாக அரசியலிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் 29-ம் தேதி அறிவித்தார்.

இதையடுத்து கடந்த 10-ம் தேதி காலை 9 மணி அளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா என பக்கத்து மாநிலங்களிலிருந்தும் ரஜினி ரசிகர்கள் பங்கேற்று  உள்ளனர். வெளியூர்களிலிருந்து பஸ்களிலும் வேன்களிலும் குடும்பம் குடும்பமாக ரஜினி ரசிகர்கள் பங்கேற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தான் திட்டவட்டமாக இனி அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் கூறிவிட்டார்.

இருப்பினும் ரஜினிகாந்த் குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்து தொடர்து பல்வேறு பிரபலங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விலகிய கராத்தே தியாகாராஜன், ரஜினியின் நண்பராவார். அவர் ரஜினியின் கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

ஆனால் ரஜினி தான் கட்சி தொடங்கவில்லை என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டதால், கராத்தே தியாகராஜன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.