இந்தியாவில் உள்ள ஏர்டெல் பயனர்கள் இப்போது உலகின் முதல் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition) திட்டத்தை வெறும் ரூ.89 விலையில் அணுக முடியும். இந்த திட்டம் பயனர்களுக்கு பிரைம் வீடியோ உள்ளடக்கத்தை நிலையான வரையறை (SD) தரத்தில் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. ஆனால், மொபைல் எடிஷனை பயனர்கள் பயன்படுத்துவதில் சில நிபந்தனைகளை உள்ளது. அது என்ன என்று தெளிவாகப் பார்க்கலாம்.

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன்
அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனை ஒரு பயனர் ஒரே ஒரு மொபைல் சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் பொருள், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் டிவிகள், லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப்கள் போன்ற பிற சாதனங்களில் இதை ஸ்ட்ரீம் செய்ய முடியாது. அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் திட்டம் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.89 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ரூ.89 என்ற ஆரம்ப விலையில் அமேசான் பிரைம் திட்டம்
அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனை ஒரு பயனர் ஒரே ஒரு மொபைல் சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் பொருள், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் டிவிகள், லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப்கள் போன்ற பிற சாதனங்களில் இதை ஸ்ட்ரீம் செய்ய முடியாது. அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் திட்டம் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.89 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது..
டெலிகிராம் செயலியில் இப்படியொரு சிக்கல் உள்ளதா? மக்களே உஷார்.!

ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் (Airtel Thanks App)
ஏர்டெல் பயனர்கள் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை நான்கு வெவ்வேறு ரீசார்ஜ்களுடன் பெறலாம்
முதலாவதாக, பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் வெளியீட்டின் ஒரு பகுதியாக, ஏர்டெல் தனது பயனர்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் (Airtel Thanks App) மூலம் அமேசான் பிரைமிற்கு சைன் செய்வதன் மூலம் 30 நாள் இலவச சோதனையை ட்ரயல் (Trial) சலுகையாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

30 நாள் இலவச ட்ரயல் சோதனை
30 நாள் இலவச ட்ரயல் சோதனை முடிந்ததும், பயனர்கள் நான்கு வெவ்வேறு ப்ரீபெய்ட் பேக்குகள் மூலம் இத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம், இது அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு சந்தாவைக் கொண்டுவரும். முதல் சலுகை ரூ.89 ஆகும். இதில் பயனர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சந்தாவுடன் 6 ஜிபி டேட்டாவும் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர் உருவாக்குவது எப்படி? பொங்கல் டிப்ஸ்..

ரூ.299 பேக் நன்மைகள்
திட்டத்தின் கூடுதல் நன்மைகளுக்கு, பயனர்கள் ரூ.299 பேக்கை தேர்வு செய்யலாம், இத்திட்டம் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் 1.5 ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சந்தாவுக்கான நன்மையுடன் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதுதவிர, அமேசான் பிரைமின் முழுமையான நன்மைகளை HD தரத்தில், பல சாதனங்களில் அணுகவும் ஏர்டெல் இடம் திட்டங்கள் உள்ளது.

ரூ. 349 பேக் நன்மைகள்
விளம்பரமில்லாத பிரைம் மியூசிக் சந்தா, பிரைம் ரீடிங் மற்றும் பல போன்ற பிற நன்மைகளைப் பெறப் பயனர்கள் நிலையான அமேசான் பிரைம் உறுப்பினர் திட்டத்தை ஆக்டிவேட் செய்ய ரூ.131 செலுத்த வேண்டும். இது உங்களுக்கு ரூ. 349 பேக் மூலம் சலுகையாக கிடைக்கிறது. இத்திட்டம், உங்களுக்கு அமேசான் பிரைமின் முழுமையான நன்மைகளையும், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவையும் 28 நாட்களுக்கு வழங்குகிறது.

வரவேற்கப்படும் சலுகை திட்டங்கள்
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ரீசார்ஜ் திட்டங்களும் இப்போது ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் மூலம் ஆன்லைனில் உடனே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான ரீசார்ஜ் பாயிண்ட்களிலும் இப்போது கிடைக்கின்றது. உண்மையில் ஏர்டெல் நன்மைகளுடன் அமேசான் பிரைம் சந்தா கிடைக்கும் சலுகைகள் வரவேற்கப்படும் திட்டங்கள் தான்.