50 நாடுகளில் புதிய கொரோனா: அசுர வேகத்தில் வரும் ஆபத்து!

ஏற்கெனவே பரவி வரும் கொரோனாவை காட்டிலும் 70% அதிக வேகத்தில் பரவக்கூடிய சக்திவாய்ந்த கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் 14அம் தேதி பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக பல நாடுகள்
பிரிட்டன்
இடையேயான விமான பயணங்களுக்கு தடை விதித்தன. ஆனாலும், தடை அமலுக்கு வருவதற்கு முன் பயணம் மேற்கொண்டவர்களால் பல்வேறு நாடுகளுக்கு
புதிய கொரோனா
பரவிவிட்டது.

இந்நிலையில், 50 நாடுகளுக்கு புதிய கொரோனா பரவியுள்ளதாக
உலக சுகாதார அமைப்பு
தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக சோதனை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உலகின் பழைமையான ஓவியம் கண்டுபிடிப்பு: எத்தனை வருஷம் பழையது தெரியுமா?

பிரிட்டனை போல தென்னாப்பிரிக்காவில் மற்றொரு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் சுமார் 20 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்த வைரஸால் உடல்நிலைக்கு மோசமான விளைவுகள் ஏற்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வைரஸ்களுமே உலகளவில் எவ்வளவு வேகத்தில் பரவும் என்பது குறைத்து மதிப்பிடப்படுவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. புதிய கொரோனா குறித்து ஆலோசிக்க இரு தினங்களுக்கு முன் உலக சுகாதார மையம் 1,750 சர்வதேச அறிவியல் ஆய்வாளர்களுடன் ஆலோசனை நடத்தியது.

உருமாறிய புதிய கொரோனா வைரஸ்களின் தாக்கத்தையும், நோயின் தீவிரத்தையும், தடுப்பூசி, பரிசோதனை உள்ளிட்டவை குறித்தும் கண்டறிவதற்காக ஆய்வுகள் நடைபெறுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.