அச்சாரம் போட்ட GoBackModi; தமிழக அரசியலில் ஓவியாவின் சர்ப்ரைஸ்!

ஹைலைட்ஸ்:

திமுக பேச்சாளராக ஓவியா களமிறங்கவுள்ளதாக செய்தி
சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஐபேக் நிறுவனம் வியூகம்
ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்

தமிழக அரசியலில் பாஜகவிற்கான இடத்தை உருவாக்க
மத்திய அரசு
தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் திராவிட சித்தாந்தம் ஆழமாக வேரூன்றி இருக்கும் தமிழக மண்ணில் இந்துத்துவா கொள்கை கொண்ட கட்சியை அனுமதிக்க மக்கள் இன்னும் தயாராகவில்லை என்றே தெரிகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை கூறலாம். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த
பாஜக
ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் அந்த கூட்டணிக்கு ஒரேவொரு தொகுதியை மட்டும் தமிழக மக்கள் வழங்கியிருந்தனர். அந்தளவிற்கு பாஜகவிற்கு எதிரான மனநிலை தமிழகத்தில் தொடர்வதை அறிய முடிகிறது.

ஆனால் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்றதில் இருந்து காட்சிகள் மாறத் தொடங்கியிருக்கின்றன. திரைத்துறை சார்ந்த பிரபலங்களை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
திமுக
, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்முகாமில் இருக்கும் கட்சி பிரமுகர்களை வளைப்பதிலும் மும்முரம் காட்டி கொண்டிருக்கின்றனர். ஆனாலும்
பிரதமர் மோடி
, உள்துறை அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் தேசியத் தலைவர்கள் வருகையின் போது சமூக வலைதளங்களில் எதிர்மறையாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டாவது மட்டும் குறைந்தபாடில்லை.

தமிழக அரசு பேருந்து பயணம்; பெண் பயணிகளுக்கு சலுகை – புதிய உத்தரவு!

இதன் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் சதி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகம் வந்த போது “GoBackModi” என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை
ஓவியா
. இந்த விஷயத்தை பலரும் எதிர்பார்க்கவில்லை. இவரது பின்னணியில் திமுக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

ஸ்டேட் விட்டு ஸ்டேட் போன இடத்தில் விஜய் சேதுபதிக்கு நடந்த கொடுமை

இந்நிலையில் ஓவியாவின் ட்வீட் பற்றி
சிபிசிஐடி
சைபர் பிரிவிற்கு பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓவியாவை மையமாகக் கொண்டு புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

சாதித்தது என்ன? முதல்வர் நாற்காலியில் 4 ஆண்டுகளை நிறைவு செய்த பழனிசாமி!

அதாவது திமுக பேச்சாளராக ஓவியாவிற்கு பதவி வழங்க திமுகவின் அரசியல் ஆலோசக நிறுவனமான
ஐபேக்
திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவிற்கு ஆதரவாக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முன்னணி நடிகைகள் யாரும் தற்போது இல்லை. இந்த சூழலில் ஓவியாவின் வருகை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.