‘‘காங்., தேவையில்லாத சுமையென திமுகவினர் நினைக்கின்றனர்,’’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓபிஎஸ் தலைமையில் கட்சி, இபிஎஸ் தலைமையில் ஆட்சி என்பது தான் அதிமுக. அவர்களுக்கு தான் இரட்டை இலை என்பது தேர்தல் ஆணையமே தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதனால் அதிமுக பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. டிடிவி.தினகரன் அதிமுகவை மீட்போம் என்று பேசுவது தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதற்கு பயன்படலாம் தவிர, வேறு எந்த விதத்திலும் பயன்படாது.
இங்கு ஒரு லட்சம் தான் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுப்பதில் சிரமம் இருக்காது.
இன்னும் ஒரு தலைமுறை ஆனாலும் காங்., எழ முடியாது. புதுச்சேரி அரசு இன்னும் எத்தனை மணி நேரம் நீடிக்கும் என்று தெரியவில்லை. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அவர்கள் செய்த ஊழல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ராகுல்காந்தி செல்லுமிடமெல்லாம் காங்கிரஸில் இருப்பவர்கள் கட்சியை விட்டு சென்று விடுகின்றனர். காங்., தேவையில்லாத சுமையென திமுகவினர் நினைக்கின்றனர், என்று கூறினார்.