பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: பதின்டா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றிய காங்.

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: பதின்டா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றிய காங்.

|

அமிர்தசரஸ்: பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பதின்டா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்துள்ளது.

தேர்தல் நடைபெற்ற 7 மாநகராட்சிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி அசத்தலான வெற்றியைப் பெற்றிருக்கிறது. சிரோமணி அகாலி தளம், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் கடும் பின்னடைவை இந்த தேர்தலில் எதிர்கொண்டிருக்கின்றன.

பதின்டா மாநாகராட்சியை 53 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. பதின்டா லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருப்பவர் ஹர்சிம்ரத் கவுர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கவுர், விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பதின்டா நகர்ப்புற சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மாநில நிதி அமைச்சர் மன்பிரீத் சிங் பாதல். சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர்சிங் பாதலின் உறவினர். பதின்டா வெற்றி குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில், 53 ஆண்டுகளுக்குப் பின்னர் பதின்டா மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியின் மேயர் பதவியில் அமருகிறார். பதின்டா வாக்காளர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

பதின்டாவில் 53 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் வென்றிருப்பதை அக்கட்சியினர் ஆரவாரமாக கொண்டாடுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.