பழநி கோயில் கும்பாபிஷேக பணியை விரைவுபடுத்த கோரிக்கை

பழநி: பழநி கோயில் கும்பாபிஷேக பணியை விரைவுபடுத்த வேண்டுமென இந்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இந்து வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கௌரவத் தலைவர் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் மணிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் ஹரிஹரசுப்பிரமணி, இந்து முன்னனி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பழநி நகரை புனித நகராக அறிவித்து தமிழக அரசு அதற்கான நிதியை ஒதுக்கிட வேண்டும். பழநி கோயில் கும்பாபிஷேக பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பழநி வழித்தடத்தில் ராமேஷ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். பழநி கோயிலில் 2வது ரோப்கார் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.