மாமா மனசுல.. பார்த்துப் பார்த்துப் பூரித்த மைனா நந்தினி.. சந்தோஷத்தில் அழுகை!

By Velsamy

|

சென்னை: இன்ப அதிர்ச்சி கொடுத்து மைனா நந்தினியை கதறி அழ வைத்துள்ளார் அவரது கணவர் .

இவர்களின் அன்பினை பார்த்து வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடி இவர்கள் வெளியிட்ட வீடியோ தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

மைனா

தொகுப்பாளராக அறிமுகமாகி சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் தனது நகைச்சுவை மூலமாக அனைத்து ரசிகர்களையும் சிரிக்கவைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நந்தினி வாழ்க்கையில் பெரும் துயரங்களை கடந்து வந்துள்ளார் .இவரது கஷ்டங்களை தெரிந்து கொண்ட இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து ஆறுதலை அளித்து வந்துகொண்டிருந்தனர்.

சூப்பர் வாழ்க்கை

சூப்பர் வாழ்க்கை

அதுவுமில்லாமல் இவருக்காக பலர் நல்ல ஒரு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று விரும்பி வந்தனர். அதுமாதிரி தான் தற்போது நந்தினி அழகான குழந்தையோடும் பாசமான கணவருடன் சந்தோஷமாக இந்த காதலர் தினத்தை கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டதை பார்த்த அவருடைய ரசிகர்களும் கண்கலங்கி அவருக்காக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

காதலித்து திருமணம்

காதலித்து திருமணம்

நந்தினி சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது காதலித்து திருமணம் செய்துகொண்டார் .ஆனால் அந்த காதல் வாழ்க்கை ரொம்ப நாட்கள் நிலைக்கவில்லை .அவரது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அவருக்கு ஆறுதலாக அவருடைய ரசிகர்கள் தான் இருந்து வந்தனர் .இந்த நிலையில்தான் மீண்டும் நாயகி சீரியலில் நடித்துக்கொண்டிருந்த யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கலாய்ப்புக்கு மத்தியில் மகிழ்ச்சி

கலாய்ப்புக்கு மத்தியில் மகிழ்ச்சி

ஆனால் இவர் திருமணம் செய்யும் போது இவருடைய ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தாலும் சில நெட்டிசன்கள் இவர்களது திருமணத்தை வைத்து கலாய்த்து வந்தனர். ஆனால் இவர்கள் எப்போதுமே நெகட்டிவ் கமெண்டுகளை வைத்து கொஞ்சம் கூட கவலைப் படுவதில்லை .அதனை ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கையில் காதலோடு முன்னேறி வருகிறார்கள்.

மீண்டும் சீரியலில் பிசி

மீண்டும் சீரியலில் பிசி

இவர்கள் இருவரும் தற்போது மீண்டும் சீரியல்களில் கவனத்தை செலுத்தி வந்தாலும் இந்த காதலர் தினத்தை மறக்க முடியாத அளவிற்கு கொண்டாடி இருக்கிறார்கள் .அதுவும் யோகேஸ்வரன் நந்தினி கேக் வெட்டி சர்ப்ரைஸ யோடு நந்தினியை இன்ப அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார். காதலர் தினத்துக்காக 2 சென்டிமென்ட் கிப்ட் கொடுத்து அசத்தியிருக்கிறார் .

சர்ப்பிரைஸ்

அதை யாருக்கும் காட்டாமல் நந்தினிக்கு மட்டும் காட்டி ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறார். அவர் குட்டியாக ஒரு பேப்பரில் மடக்கி வைத்திருக்கும் ஒரு பொருளை பார்த்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்து யோகேஸ்வரன் கட்டிப்பிடித்து இருக்கிறார். மீண்டும் அவரது நெஞ்சில் இவரது உருவத்தை பச்சை குத்தி இருப்பதை பார்த்து கண்ணீரோடு காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் நந்தினி. இதனை பார்த்த அவருடைய ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோக்கள் தான் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.