மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் டப்புல்ல டி லிவேரா காவல்துறை அதிபருக்கு பணித்துள்ளார்.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் சட்டமா அதிபர் காவல்துறை அதிபரை பணித்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் 2020 ஏப்ரல் 14ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். எனினும் அவரை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளும் அவரின் குடும்பத்தினருக்கும் வசதிகள் வழங்கப்படவில்லை.
2019, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை விடுதலை செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.