இடைக்கால தடை நீக்கம்: திட்டமிட்டபடி நாளை ரிலீஸாகும் சக்ரா

ஹைலைட்ஸ்:

விஷாலின் சக்ரா பட ரிலீஸ் பிரச்சனை தீர்ந்தது
சக்ரா பட ரிலீஸுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்
சக்ரா படம் திட்டமிட்டப்படி நாளை ரிலீஸ், ஹைகோர்ட்டுக்கு நன்றி- விஷால்

புதுமுகம் ஆனந்தன் இயக்கத்தில்
விஷால்
போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள
சக்ரா
படம் பிப்ரவரி 19ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டனர். படத்தை விஷால் தான் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் சக்ரா படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கக் கோரி ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு செவ்வாய்க்கிழமை நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தயாரிப்பாளர் ரவீந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது, எங்கள் நிறுவனத்திற்கு படம் பண்ணுவதாக ஆனந்தன் ஒப்புக் கொண்டார். ஆனால் அந்த படத்தை தற்போது விஷாலுக்காக பண்ணியிருக்கிறார். அதனால் சக்ரா படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து சக்ரா படத்தின் ரிலீஸுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி இது குறித்து விஷாலும், ஆனந்தனும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் ட்ரைடன்ட் ரவீந்திரனுடன் சமரசம் பேச முன்வந்தார் விஷால். சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் படத்தின் நஷ்ட தொகையை தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் செலுத்துமாறு விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக விஷால், ரவீந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க ஒருவரை நீதிமன்றம் நியமித்தது.

இந்நிலையில் சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டிருக்கிறது. மார்ச் மாதம் 5ம் தேதி வரையிலான வசூல் விபரத்தை மார்ச் 10ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று விஷாலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு வந்ததை அடுத்து விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அனைத்து பிரச்சனையும் தீர்ந்துவிட்டது. நாளை சக்ரா படம் உலகமெங்கும் ரிலீஸாகிறது. வாய்மையே வெல்லும்.

எப்பொழுதுமே பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் எனக்கும், என் தொழிலுக்கும், திரையுலகம் தொடர்பானவற்றுக்கும் உண்மையாக இருக்கிறேன்.

தடை நீக்கப்பட்டுவிட்டது. சக்ரா நாளை ரிலீஸாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நாளை பிரமாண்டமாக ரிலீஸாகும். சரியான நேரத்தில் உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

பொசுக்குனு அசிங்கப்படுத்திட்டீங்களே விஷால்: சர்காரை விட சக்ராவுக்கு பெருசா பிரச்சனை வருமோ?
முன்னதாக சக்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அந்த ட்ரெய்லரில் விஷால் பேசிய வசனங்கள் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.