இது வலிமை அப்டேட் தானா? – புது கெட்டப்பில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த அஜித் !!

இந்தி திரையுலகைச் சேர்ந்த போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது. இப்படத்தினை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார்.

‘நேர்கொண்ட பார்வை’-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ‘வலிமை’ படத்தில் இணைந்தது. இந்த நிலையில், தற்போது இணையத்தில் பெரிய பேசுபொருளாக இருப்பது நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் தான். கிரிக்கெட், அரசியல் பிரமுகர்களிடமும் வலிமை அப்டேட் கேட்க தொடங்கினர் ரசிகர்கள். இதனால் பதறிய அஜித் திடீரென அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார்.

தற்போது, ஹைதராபாத், ராஜஸ்தானில் படப்பிடிப்பை முடித்த படக்குழு சண்டைக் காட்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றது. இம்மாத இறுதிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50-வது பிறந்தநாளான மே 1ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷார்ட் ஹேர்ஸ்டைல், கருப்பு நிற டி சர்ட், கருப்பு நிற தொப்பியுடன் மாஸாக இருக்கிறார் அஜித். அஜித்துடன் ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் தெறிக்கவிட்டு வருகிறது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.