சென்னையை அடுத்த குன்றத்தூரில் திருமணம் செய்ய காதலி வற்புறுத்தியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண்ணை விட்டு அந்த இளைஞர் பிரிந்ததாக தெரிகிது.
இந்நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளைஞரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சதீஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து இளைஞரின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் குன்றத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in