மிகவும் எதிர்பார்த்த வசதியை அறிமுகம் செய்ய திட்டமிடும் ட்விட்டர் நிறுவனம்.!

ட்விட்டர் தளத்தை இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

 ட்விட்டர் தளத்தை அதிகமாக

அதிலும் இந்தியாவில் ட்விட்டர் தளத்தை அதிகமாக பயன்படுத்தும் மக்கள் தினசரி எதாவது ஒரு ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் டேரெக்ட் மெசேஜ் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது அந்நிறுவனம்.

ட்விட்டர் இந்தியா

மேலும் இதுதொடர்பான ட்வீட்டை ட்விட்டர் இந்தியா போஸ்ட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவுடன் பிரேசில், ஜப்பான் மாதிரியான நாடுகளிலும் இந்த வாய்ஸ் மெசேஜ் வசதியை சோதனையிட்டு வருவதாக ட்விட்டர் நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

ட்விட்டர் இந்தியாவில் நிர்வாக இயக்குனர் மணீஷ்

ட்விட்டர் இந்தியாவில் நிர்வாக இயக்குனர் மணீஷ்

ட்விட்டர் இந்தியாவில் நிர்வாக இயக்குனர் மணீஷ் மகேஸ்வரி கூறியது என்னவென்றால், இந்தியா ட்விட்டரின் முன்னணி சந்தைகளில் ஒன்றாகும். எனவே நாங்கள் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை சோதித்து வருகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த புதிய வசதி எப்படி செயல்படும் என்பது தொடர்பான வீடியோவையும் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் ஆல்-இன்-ஒன் பயன்பாடு இப்போது ஐபாட் இல் அறிமுகம்..

பொதுக்கொள்கை இயக்குநர் மஹிமா கவுல்

பொதுக்கொள்கை இயக்குநர் மஹிமா கவுல்

முன்னதாக வெளிவந்த தகவலின்படி, இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின் பொதுக்கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் இதுபற்றி அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ள ட்விட்டரின் பொதுக்கொள்கை துணைத் தலைவர் மோனிக் மெக்கே தெரிவித்து என்னவென்றால்

 இயக்குநர் மஹிமா கவுல்

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின் பொதுக் கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் அவரது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும் இந்த ஆண்டு துவக்கத்திலேயே அவர் இதை தெரிவித்தார். இது எங்களுக்கு பெரிய இழப்புதான் என மோனிக் மெக்கே கூறியுள்ளார்.

 மானிக் மெக்கே

மேலும் மானிக் மெக்கே கூறியது என்னவென்றால்,ஐந்து வருடத்திற்கும் மேலாக பணியாற்றிய மகிமா அவரது வாழ்க்கையின் முக்கியமான நபர்கள் மற்றும் சொந்தங்கள் மீது கவனம் செலுத்த நினைக்கிறார். பின்பு அவர் வரும் மார்ச் மாதம் இறுதி வரை பணியில் இருப்பார் என்று மானிக் மெக்கே கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.