மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான மைக்ரோமேக்ஸ் IN நோட் 1 மற்றும் மைக்ரோமேக்ஸ் IN நோட் 1b ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மலிவு விலையில் சிறப்பான சிறப்பம்சங்களுடன் ஆன்லைன் போர்டல் வழியாக மட்டுமே விற்பனைக்கு வந்தது.

இன்று முதல் ஆப்லைன் கடைகள் வழியாக
ஆனால், இப்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மைக்ரோமேக்ஸ் IN நோட் 1 மற்றும் மைக்ரோமேக்ஸ் IN நோட் 1b ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் இந்தியாவில் இன்று முதல் ஆப்லைன் கடைகள் வழியாகவும் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் எந்த இடங்களில் இப்போது இந்த ஸ்மார்ட்போன் ஆப்லைன் கடைகள் வழியாக கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

எங்கெல்லாம் வாங்க கிடைக்கிறது?
மைக்ரோமேக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி, சிம்டெல் மொபைல் பிளானட், ரோஷினி மொபைல்ஸ் மற்றும் வினோத் எண்டர்பிரைசஸ் ஆகியவற்றுடன் ஏழு மாநிலங்களில் கூட்டு சேர்ந்து நிறுவனம் அதன் சில்லறை விற்பனையை நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. இப்போது மகாராஷ்டிரா, குஜராத், கோவா, அசாம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கர்நாடகாவில் ஆஃப்லைனில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
WhatsApp Cart அம்சத்தை எப்படி பயன்படுத்துவது? ஈசி டிப்ஸ்..

மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சம்
- 6.52′ இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர்
- 2 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு OS இயங்குதளம்
- 13MP முதன்மை கேமரா
- 2MP டெப்த் சென்சார்
- 8 எம்.பி கேமரா
- 10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5,000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்கள்
- 6.67′ இன்ச் முழு எஃப்.எச்டி பிளஸ் டிஸ்பிளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 10
- 1000MHz ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு கொண்ட 4 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- எஸ்.டி கார்டு ஸ்லாட் வசதி
- 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 5 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
- 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா
- 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
- 16 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமரா
யாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்! இப்போதே ட்ரை செய்யுங்கள்!

பேட்டரி
- எப்எம் ரேடியோ
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- பின்புற கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைபை
- ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 18W பாஸ்ட் சார்ஜிங்
- 5000 எம்ஏஎச் பேட்டரி