ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலத்தில் ஆத்ம நாயகி அம்மன் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசி மக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றக்குடி ஆதினத்திற்கு உட்பட்ட ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் நேற்று காலை சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரிஷப கொடி ஏற்றப்பட்டு மாசிமக திருவிழா தொடங்கியது.பத்து நாள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெறும் இத்திருவிழாவில் 21ம் தேதி ஐந்தாம் நாள் திருவிழாவாக திருக்கல்யாணமும், ஆறாம் நாள் கழுவன் திருவிழாவும், ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டம், பத்தாம் நாள் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தினமும் இரவில் கேடயம், குதிரை, ரிஷபம், பள்ளக்கு உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி வாணவேடிக்கையுடன் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோயில் நிர்வாகம் செய்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.