தங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து 20% வீழ்ச்சியினை கண்டுள்ளது. இது எட்டு மாதங்களில் குறைந்த விலையினை தற்போது எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையிலும் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக இந்திய சந்தையில் தொடர்ச்சியாக ஐந்து நாட்களாக தங்கம் விலையானது சரிந்து வருகின்றது.
இந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. சரி வாருங்கள் பார்க்கலாம் இன்றைய விலை நிலவரம் என்ன? முக்கிய காரணங்கள் என்ன என்று?
முக்கிய காரணம்
இது பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் இந்த விலையானது வீழ்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்க பத்திரம் லாபமானது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா டாலரின் மதிப்பும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இது தங்கத்தின் விலை சரிய முக்கிய காரணமாக உள்ளது.

தங்கம் ஆபரண விலை
குறிப்பாக இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது சரிவில் உள்ளது. கிராமுக்கு 48 ரூபாய் குறைந்து, 4,416 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 384 ரூபாய் குறைந்து 35,328 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. அரசு பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதியினை குறைத்த நிலையில், தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது.

தூய தங்கம் விலை
இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 52 ரூபாய் குறைந்து 4,818 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 416 ரூபாய் குறைந்து 38,544 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று சற்று ஏற்றம் கண்டிருந்த நிலையில், இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

ஆபரண வெள்ளி விலை
இதே கிராம் வெள்ளியின் விலையானது இன்று மாற்றாமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கிராமுக்கு 75 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 75,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக வெள்ளி விலையானது தொடர்ச்சியாக ஏற்றத்தினையே கண்டு வருகின்றது.