அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் பாரதீய ஜனதாவின் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த செல்வாக்கை ஏற்றுக் கொள்ள நினைப்பதாக திரிபுரா சட்டத்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதாக் கட்சி நேபாளம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அமைக்கப்படும் என்று ஏற்கனவே திரிபுரா முதல்வர் பிப்லாப் டெப் கூறியிருந்த நிலையிலேயே லால் நாத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.
குறித்த நாடுகளில் பாரதீய ஜனதாக் கட்சி தமது தளத்தை உருவாக்கும் என்று அர்த்தமல்ல என்று ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார்.
முழு உலகமும் பாரதீய ஜனதாக் கட்சியின் எண்ணங்களை ஏற்றுக் கொள்ளும் என்று தாம் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருப்பவர்கள் இப்போது பாரதீய ஜனதாக் கட்சியின் எண்ணங்களை ஏற்றுக் கொள்ள நினைக்கிறார்கள்.
அமெரிக்காவும் ஏற்றுக்கொள்ள நினைக்கிறது. முழு உலகமும் இப்போது இதனைப் பற்றி சிந்திக்கிறது என்று நாத் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளையும் ஆளுமையையும் நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.