ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி,
பிரதமர் மோடி விஸ்வ-பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி வழியே கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்பொழுது, விஸ்வ-பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது உந்துதலாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.  இந்த விழாவில் தனிப்பட்ட முறையில் நேரிடையாக வந்து கலந்து கொண்டால் நன்றாக இருந்திருக்கும்.  ஆனால், புதிய விதிகளின்படி (கொரோனா) காணொலி காட்சி வழியே நான் கலந்து கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை பரப்பி கொண்டிருக்கும் பலர் நன்கு படித்தவர்கள்.  திறமை வாய்ந்தவர்கள்.  மற்றொரு புறம், கொரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து மக்களை காக்க மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் தங்களது வாழ்வை பணயம் வைத்து செயல்படும் மக்களும் உள்ளனர்.  இது மக்களின் மனநிலை சார்ந்தது.  
இரண்டுக்கும் வழிகள் திறந்தே உள்ளன.  நாம் ஒரு விவகாரத்தின் பகுதியாக அல்லது தீர்வின் ஒரு பகுதியாக இருப்பது பற்றி முடிவெடுப்பது நம்முடைய கைகளிலேயே உள்ளது.
புதிய தேசிய கல்வி கொள்கை ஆனது, ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தினை நோக்கிய ஒரு பெரிய நடவடிக்கை.  ஆய்வுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அது வலிமை சேர்க்கிறது என அவர் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.