இந்தியாவுடன் மோதல்.. பலியான சீன ராணுவ வீரர்கள்.. உண்மையை ஒப்புக்கொண்ட சீனா!

கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து இப்போது வரை இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இரு தரப்பு அதிகாரிகளும் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சில தினங்களுக்கு முன் எல்லைப் பகுதியில் இருந்து இரு நாடுகளும் குறிப்பிட்ட அளவிலான ராணுவ வீரர்களை விலக்கிக்கொண்டனர்.

கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கசப்புத்தன்மையை அதிகரித்தது.

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் இலவசம்.. சூப்பர் அறிவிப்பு!

இந்திய ராணுவத்தின் 20 வீரர்கள் உயிரிழந்தாலும், சீன ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் நீடித்தது. உயிரிழந்த சீன வீரர்கள் குறித்து வெளியான சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை சீன அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில், இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் ஐந்து சீன ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இவர்கள் ஐந்து பேரும் காரகோரம் மலைத்தொடர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் சீனா தெரிவித்துள்ளது. இதில் ஜி ஃபபாவோ என்ற படை தளபதியும் உயிரிழந்துள்ளார்.

செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம்! வழிநடத்திய இந்தியப் பெண்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.