புதுடெல்லி,
ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே கே.-9 வஜ்ரா ரக 100-வது டாங்கியை கொடியசைத்து ராணுவத்தில் இணைத்து வைத்தார். சிறிய ரக பீரங்கி டாங்கியான இது மேக் இன் இந்தியா திட்டத்தின்படி உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. சூரத் அருகே உள்ள ஹாசிராவில் லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்டு டி) நிறுவனம் இந்த ரக டாங்கிகளை இந்திய ராணுவத்திற்காக தயாரித்து வழங்குகிறது.
இந்த நிறுவனம், 100 டாங்கிகளை தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தில் 2017-ல் இணைந்தது. தனது ஒப்பந்த காலம் முடிவடையும் முன்பே அனைத்து டாங்கிகளையும் தயாரித்துகொடுத்து சாதனை படைத்துள்ளது.
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், கடந்த ஆண்டு ஜனவரியில் 51-வது வஜ்ரா டாங்கியை ராணுவத்தில் இணைத்து தொடங்கி வைத்திருந்தார். பின்னர் குறுகிய காலத்தில் 100-வது டாங்கி வரை தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.