நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் நடுத்தர மக்கள் உச்சக்கட்ட கலக்கத்தில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இன்று மட்டும் சேலம் மற்றும் மதுரையில் ஒரு கிலோ கறிவேப்பிலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் செய்யும் அட்டகாசங்களும் ஒரு பக்கம் வைரலாகி வருகின்றன. 

பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி என எதன் விலை உச்சத்தை தொட்டாலும் அந்த சமயத்தில் திருமணம் செய்யும் புதுமண ஜோடிக்கு அவற்றை பரிசாக கொடுத்து, கல்யாணம் ஆன முதல் நாளே ‘இப்பவே கண்ண கட்டுதே’ என கலாய்க்க வைத்து பார்ப்பது நண்பர்களின் வாடிக்கையாக உள்ளது. அப்படி ஒரு சுவையான சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. 

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த கார்த்திக் – சரண்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள் புதுமண தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோல், சின்ன வெங்காய மாலை, சமையல் எரிவாயு ஆகியவற்றை பரிசாக வழங்கி, விலையேற்றத்தை சமாளிக்க இப்பவே பயிற்சி கொடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: அடி ஆத்தி… ஒரு கிலோ கறிவேப்பிலை விலை இவ்வளவா?… வாய்பிளக்கும் மக்கள்…!

பெட்ரோல் லிட்டர் இன்று 92 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 வரையிலும் விற்பனையாகி வரும் சமயத்தில், திருமண ஜோடிக்கு நண்பர்கள் வழங்கிய இந்த வித்தியாசமான பரிசு சோசியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது.