இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த 20 வயது பெண்ணின் மரணத்தில் எழுந்த சர்ச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிந்ததாக நேற்று பதிவான ரிதிமாலியத்த ஆடை தொழிற்சாலை ஊழியரான 20 வயது யுவதியின் மரணம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அதிர்ச்சித் தகவல் வௌியிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன,

சிகிச்சை மத்திய நிலையத்தில் 7 நாட்கள் இருந்த யுவதி 15ம் திகதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் 16ம் திகதி 1990 அம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து மீண்டும் சுகயீனமுற்றதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவரை பதுளை வைத்தியசாலைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது. எனினும் அதற்கிடையில் மஹியங்கனை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர்.

அத்தோடு மஹியங்கனை வைத்தியசாலையில் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் குறித்த யுவதி வைக்கப்பட்டுள்ளார். மரணத்தின் பின் பொது சுகாதார பரிசோதகர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் குறித்த யுவதி 10 நாட்களில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது சுகாதார பிரிவினர் ஏன் வைரஸ் தாக்கம் குறித்து கவனத்தில் எடுக்கவில்லை? என்று உபுல் ரோஹன கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.