இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 79 000 ஐ அண்மித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி வரை 506 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 78 926 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 72 566 பேர் குணமடைந்துள்ளதோடு 5672 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு 617 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதே வேளை நேற்று வியாழக்கிழமை 20 வயது யுவதி உள்ளிட்ட 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
ரிதிமாலியத்த பிரதேசத்தை சேர்ந்த யுவதியொருவர் கஹகொல்ல சிகிச்சை நிலையத்திலிருந்து மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கும் பின்னர் அங்கிருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கும் மாற்றி அனுப்பபட்டுள்ளதுடன் அங்கு அவர் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
தீவிர கொவிட் நிமோனியாவால் சுவாசத் தொகுதி செழிலந்துள்ளமையே இவரது மரணத்திற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் குறித்த யுவதிக்கு தொற்றுறுதி செய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னரே அவர் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அதனையடுத்து 7 நாட்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பி, மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்படவே மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னரே உயிரிழந்ததாகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்க தலைவர் உபுல் றோஹன தெரிவித்தார்.
இதே வேளை தெமட்டகொடையைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்னொருவர் கடடந்த 16 ஆம் திகதி கொவிட் நிமோனியா மற்றும் தீவிர நீரிழிவு நோய் நிலைமையால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
மீகொட பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 16 ஆம் திகதி நுரையீரல் அழற்சியால் சுவாச தொகுதி செயழிலந்தமை, கொவிட் நிமோனியா என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 8 ஐ சேர்ந்த 58 வயதுடைய ஆணொருவர் அநுராதபுரம் மெத்சிரி செவன சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட இதய பாதிப்பு , உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
தெகட்டன பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, தீவிர நீரிழிவு , உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 10 ஐ சேர்ந்த 86 வயதுடைய ஆணொருவர் கடந்த 17 ஆம் திகதி கொவிட் நிமோனியா, நுரையீரல் தொற்று என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
வாழைதோட்டத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண்னொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் ஜனவரி 22 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.
வத்தளையை சேர்ந்த 81 வயதுடைய ஆணொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் ஜனவரி 20 ஆம் திகதி கொவிட் தொற்று, இதயம் செயழிலந்தமை என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.