என் மகளுக்கும், அனிருத்துக்கும் திருமணமா?: கீர்த்தி சுரேஷ் தந்தை விளக்கம்

ஹைலைட்ஸ்:

கீர்த்தி சுரேஷ், அனிருத் இடையேயான காதல் குறித்த உண்மை வெளியானது
என் மகளுக்கு அனிருத்துடன் திருமணம் இல்லை- கீர்த்தி சுரேஷ் தந்தை
கீர்த்தி, அனிருத் கல்யாண பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த தந்தை

கீர்த்தி சுரேஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேச்சு கிளம்பியது. அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்த கீர்த்தி தான் அதற்கு காரணம். தான் அனிருத்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட இரண்டு புகைப்படங்களை கீர்த்தி வெளியிடவே அதை பார்த்தவர்கள் இவர்கள் காதலிக்கிறார்கள் போன்று என்று பேசத் துவங்கினார்கள்.

அந்த பேச்சு அடங்கி ரசிகர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பியது. இந்நிலையில் கீர்த்தியும், அனிருத்தும் காதலில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம் என்று தகவல் கடந்த வாரம் வெளியாகி தீயாக பரவியது.

கீர்த்திக்கும், அனிருத்துக்கும் கல்யாணமாமே, திருமதி ஆன பிறகு நடிப்பாரா இல்லையா என்று ரசிகர்கள் அடுத்த கட்டத்திற்கே சென்றுவிட்டார்கள். இந்நிலையில் இது குறித்து கீர்த்தியின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார்.

அவர் கூறியதாவது,

என் மகளுக்கு திருமணம் என்று பரவிய தகவலில் உண்மை இல்லை. கீர்த்திக்கு திருமணம் என்று வதந்தி பரவியது இது மூன்றாவது முறை ஆகும் என்றார்.

முன்னதாக நகைச்சுவை நடிகர் சதீஷுக்கும், கீர்த்திக்கும் திருமணம் என்று கூட பேசப்பட்டது. நெருப்பில்லாமல் புகையாதே என்று சமூக வலைதளவாசிகள் கூற கீர்த்தி, அனிருத்துக்கு நெருக்கமானவர்களோ வேறு மாதிரி சொல்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ், அனிருத் இடையே என்ன தான் நடக்குது?: உண்மை இதோ
அதாவது, கீர்த்தியும், அனிருத்தும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அவர்களுக்கு இடையே
காதல்
எல்லாம் இல்லை. இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்கிறார்கள்.

அனிருத்துக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்களாம். இதையடுத்து அவருக்கு ஏற்ற பெண்ணை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கீர்த்தியின் பெயர் அடிபட, பெற்றோருக்கு வேலை வைக்காமல் அனிருத்தே பெண்ணை தேடி விட்டார் போன்று என விமர்சனம் எழுந்தது.

அனிருத்தும், கீர்த்தியும் அவரவர் படங்களில் பிசியாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.