ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் பங்கு விலை 10% ஏற்றம்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

தனியாரை சேர்ந்த ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்கின் பங்கு விலை இன்று 10% வரை அதிகரித்துள்ளது.

எதற்காக இந்த திடீர் ஏற்றம்? என்ன காரணம்? தற்போது விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்கின் நிர்வாக குழு 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த பங்கின் விலையானது கிடு கிடு ஏற்றத்தினை கண்டுள்ளது.

இதற்கிடையில் பிஎஸ்இ-யிலும் இந்த பங்கின் விலையானது 7.49 சதவீதம் அதிகரித்து 62.45 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. எனினும் இந்த தனியார் வங்கி பங்கின் விலையானது இன்று அதிகபட்சமாக பிஎஸ்இ -யில் 65.70 ரூபாயாகவும், இதே குறைந்தபட்சமாக 57.55 ரூபாயாகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

இதே என்எஸ்இ-யிலும் இந்த பங்கின் விலையானது 7.40 சதவீதம் அதிகரித்து 62.40 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. எனினும் இந்த தனியார் வங்கி பங்கின் விலையானது இன்று அதிகபட்சமாக என்எஸ்இ-யில் 66.80 ரூபாயாகவும், இதே குறைந்தபட்சமாக 57.60 ரூபாயாகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

சொந்த வீடு கனவு நனவாக மாத சம்பளதாரர்களுக்கு நல்ல சான்ஸ்.. PNB-யின் சூப்பர் ஆஃபர்..!

இந்த தனியார் வங்கியாளர் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான கண்ணோட்டத்தினை கொண்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவில் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளது.

அதோடு இந்த தனியார் வங்கி நிதி திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், அதனை பத்திரங்கள் மூலம் திரட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த நிதி திரட்டலை ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட முறைகளில் திரட்டலாம் என்றும் இவ்வங்கி எதிர்பார்க்கிறது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த வங்கி பங்கின் முகமதிப்பு 10 ரூபாயாகும். பங்கின் விலை குறைவாக இருந்தாலும், இதன் முக மதிப்பு அதிகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.