கட்டிமுடிக்கப்படாமல் இருக்கும் வீடுகளுக்கு நிதியுதவி .. ரியல் எஸ்டேட் துறைக்கு ஜாக்பாட்..!

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு காரணங்களுக்காகத் தேக்கம் அடைந்த வீடு கட்டுமான திட்டங்களை முடிக்க வேண்டும் எனச் சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகை ஒதுக்கப்பட்டது. இந்த உதவித் தொகையின் மூலம் 2021ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்படாமல் இருக்கும் திட்டங்கள் விரைவாகக் கட்டி முடிக்க முடியும்.

முதற்கட்டமாக சுமார் 16 திட்டங்களில் அடங்கிய 4000 வீடுகள் ஏப்ரல் 1ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டு வீட்டை வாங்கியவர்கள் கையில் ஒப்படைக்க உள்ளதாக எஸ்பிஐகேப் வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான இர்பான் காசி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2019ல் Special Window for Completion of Construction of Affordable and Mid-Income Housing Projects (SWAMIH) திட்டத்தின் கீழ் இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 5 லட்சம் வீடுகள் பல்வேறு காரணங்களுக்காகக் கட்டிமுடிக்க முடியாமல் பாதியில் நிற்கிறது. இதன் மூலம் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 4.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகங்கள் முடங்கியுள்ளது.

கட்டுமான நிறுவனங்களின் மோசமான நிதிநிலை, கடன் பெற முடியாமல் தவிப்பு, கடன் நிலுகை பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் சுமார் 63 பில்லியன் டாலர் மதிப்பிலான வீட்டுக் கட்டுமான திட்டங்கள் இந்தியா முழுவதும் தேக்கம் அடைந்துள்ளது.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவே மத்திய அரசு SWAMIH என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் 3.5 பில்லியன் டாலர் அளவிலான சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாகத் தேக்கம் அடைந்த சுமார் 159 திட்டங்கள் நிதியுதவி பெற்று இதனால் 1 லட்சம் வீடுகள் விரைவில் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.