குழந்தை இறப்பு எதிரொலி!: கோவையில் 2 வாரங்களுக்கு தடுப்பூசி, சொட்டு மருந்து போடும் பணிகள் நிறுத்தம்..!!

கோவை: கோவை மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பெண்டா, ரெட்டா தடுப்பூசிகள், சொட்டு மருந்து போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ள 7,000 குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.