கொள்முதல் நிலையங்களில் நெல் மூடைகள் தேக்கம்

மேலுார் – மேலுார் தாலுகாவில் 25 நெல் கொள்முதல் நிலையங்களில் ஒப்பந்ததாரர் தினமும் லாரிகளை அனுப்பாததால் கப்பலுார் கிட்டங்கிக்கு கொண்டு செல்லவேண்டிய 75 ஆயிரம் நெல் மூடைகள் திறந்த வெளியில் தேங்கி கிடக்கின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல் மூடைகள் தேங்கி கிடப்பதால் வீணாகும் அவலம் நிலவுகிறது. கொள்முதல் செய்யும் இடங்களில் நெல்லை கொட்ட இடமின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்படவில்லை. பருவம் தவறி அறுவடை செய்தால் இழப்பு ஏற்படும் என்பதால் அதிகாரிகள் தினமும் நெல் மூடைகளை கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சுகுமார் கூறுகையில்,”தினமும் நெல் மூடைகளை கிட்டங்கிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.