கோவையை வட்டமிடும் பாஜக: காரணம் என்ன தெரியுமா?

ஹைலைட்ஸ்:

கோவையில் பாஜக அதிக நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
மோடி, மோகன் பகவத் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை கோவை வருகை தருகின்றனர்.
ஒரு லட்சம் பேரைத் திரட்ட திட்டம்

பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை பலரும் கோவையிலேயே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் கோவை பலரை சந்தித்து பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுச் சென்றார். வரும் பிப்ரவரி 25ஆம் தேதி அன்று பிரதமர் மோடி கோவைக்கு வருகை தர உள்ளார்.

இதனால் கோவையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் காவிக் கொடி பறந்துவருகிறது.
பாஜக
கோவையை குறிவைத்து களமிறங்கியுள்ள நிலையில் இதன் பின்னணி குறித்து விசாரித்தோம்.

தமிழ்நாட்டில் பாஜக காலூண்ற முட்டி மோதிக்கொண்டிருக்கும் நிலையில் கோவையில் தான் அக்ககட்சிக்கு கொஞ்சம் ஆதரவு தளம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியில் மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் இளைய மகன் களமிறங்கும் தொகுதி இதுதான்? ஹேப்பி மூடில் வாக்காளர்கள்!

கோவை மற்றும் அதைச் சுற்றி எத்தனை தொகுதி கிடைத்தாலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் பாஜக கோவையை சுற்றி வட்டமடிக்கிறது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவையில் குறிப்பிடத்தக்க இடங்களை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வெறுமனே கோரிக்கையாக இல்லாமல் தங்கள் பலத்தை அதிமுக தலைமைக்கும் காட்டும் விதமாக அதிக கூட்டங்களை நடத்துகிறது பாஜக என்கிறார்கள்.

பிரதமர் மோடி
கோவைக்கு வரும் நிகழ்ச்சிக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து ஒரு லட்சம் பேரைத் திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அந்தக் கூட்டத்தைக் காண்பித்து அதன் பின் சீட்டுகளைப் பற்றிப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒரு தொகுதியை மட்டுமே இந்த பகுதியில் ஒதுக்கும் என கூறப்படும் நிலையில் 3 தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது. எப்படியும் 2 சீட்டுகள் கிடைத்துவிடும் என நம்புகிறது.

செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம்! வழிநடத்திய இந்தியப் பெண்!

கோவையைச் சுற்றி பாலங்கள் கட்டப்பட்டாலும், விலை வாசி உயர்வு காரணமாக சிறு, குறு வணிகம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி காரணமாகவும் பல தொழில்கள் முடங்கியுள்ளன. பாஜக நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் கூட்டப்பட்டாலும் இது போன்ற காரணங்கள் அக்கட்சிக்கு எதிராக முடியும். அது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவின் வாக்குகளையும் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.